பிரதமர் மோடியுடன் சந்திப்பு: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க கோரி, நாளை பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
சென்னை : தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், அனுமதி வழங்காமலும் மத்திய அரசு இருந்து வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே விடுவிக்க முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.
அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமரை நாளை சந்திக்கவுள்ளார்.
அப்போது தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசுவார் எனத் தெரிகிறது. குறிப்பாக, மெட்ரோ 𝟐ம் கட்ட பணிகளுக்கான தொகை, சமக்ரா சிக்ஷா திட்ட நிலுவை நிதியை உடனே விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.