சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், டெய்லர் ஆகியோருக்கு தலா 10,000 வழங்க ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பல்வேறு சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதியுதவிகளை அறிவித்துள்ளார்.அதாவது இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ஒருவருக்கும் ரூ.10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி நிதியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒதுக்கியுள்ளார்.
இதன்மூலம் 82,347 சலவைத் தொழிலாளிகள்,38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 டெய்லர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…