ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி…!முதல்வர் அசோக் கெலாட் உத்தரவு
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல்வர் அசோக் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிஸ் கட்சி மத்தியபிரதேசம் , சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.இந்நிலையில் மத்தியபிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் முதல்வராகி தன்னுடைய முதல் கையெழுத்துதாக அம்மாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார்.
அதேபோல் சத்தீஸ்கர் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேஷ் பாகல் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.18,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல்வர் அசோக் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார். ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.