சிசோடியா ராஜினாமா.! டெல்லி சட்டப்பேரவைக்கு புதிய அமைச்சர்கள்.. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை.!
சவுரப் பர்த்வாஜ் மற்றும் ஆதிஷி இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால், அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறி சிபிஐ காவல்துறையினர் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை சிசோடியா ராஜினாமா செய்தார். அதே போல, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த இருவரின் ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து தற்போது புதிய அமைச்சர்களாக சவுரப் பர்த்வாஜ் மற்றும் ஆதிஷி இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை அடுத்து, அவர்கள் இருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள்.