ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு சிபிஐ செய்தது.பின்னர் 2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு மே மாதம் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.
அதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை கடந்த 03-ம் விசாரித்த நீதிமன்றம் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும் சாதாரண மனிதர்தான் ” என கூறியது.
மேலும் இன்று ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெகன் மோகன் ரெட்டி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…