நாளை மறுநாள் பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அறிவித்தார். கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது முடிவு எட்டப்பட்டது.
முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், அறிவிப்பு வெளியானது. கார்கே, ராகுல் உள்ளிட்ட கட்சி தலைவர்களை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அறிவிக்கப்பட்டது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் எனவும் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இந்த நிலையில், நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வரை டிகே சிவகுமாரும் பதவியேற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்கிறார் சித்தராமையா (75). 2013-2018 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார்.
கர்நாடக மாநில துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சகராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் சித்தராமையா. இதுபோன்று, கர்நாடக மாநில துணை முதல்வராக பதவியேற்கும் டிகே சிவகுமார் பல்வேறு துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர். கனகபுரம் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட டிகே சிவகுமார் (61) காங்கிரஸ் மாநில தலைவராகவும் உள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…