ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் கீழ் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம், தற்போது அவரை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது. அந்த தீ விபத்தில் அறைக்குள் இருந்த குப்பைகளில் கட்டுக்கட்டாக பணமும் எறிந்துபோனதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து தற்போது விசாரணை வளையத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளார்.
மார்ச் 14ஆம் தேதியன்று டெல்லியில் அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து தீயணைப்புத்துறைக்கு போன் வருகிறது. அதில், நீதிபதி வீட்டில் ஸ்டோர் ரூமில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கையில் அதில் மீதமிருந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதான் இச்சம்பவவத்தின் மையப்புள்ளியாகும்.
அதனை அடுத்து, இச்சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவின் பெயரில், தனது தலைமையில் விசாரணை குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்து அதனை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள்ளார். இதில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து , யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 6 மாதமாக பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இதில் காவல் ஆணையர் தலைமையில் விசாரிக்கப்பட்ட தகவல்களும் நீதிபதி உபாத்யாய் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. அதன்படி, தீவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 4,5 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர் விசாரணை நடைபெற்று வருவதால், நீதிபதி யஷ்வந்த் வர்மா தற்காலிமாக நீதித்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றசாட்டை யஷ்வந்த் வர்மா முற்றிலுமாக மறுத்துள்ளார். தீ விபத்து நடந்த சமயம் நானும் எனது மனைவியும் ஊரில் இல்லை. நான் வெளியூர் சென்று இருந்தேன். தீ விபத்து நடந்ததாக கூறப்படும் பகுதி எனது வீட்டின் முக்கிய பகுதி அல்ல. அது வெறும் சேமிப்பு கிடங்கு. அதில் என்னை தவிர எனது ஊழியர்களே அதிகம் பயன்படுத்துவர். என் மீதான இந்த விசாரணை அபத்தமானது என கூறினார்.
யஷ்வந்த் வர்மா மீதான இக்குற்றச்சாட்டை அடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமனம் செய்துள்ளது. இந்த குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Video of burnt cash at Justice Varma’s residence uploaded by the Supreme Court of India. Kudos to CJI Khanna for bringing such transparency and accountability in the judiciary. Unprecedented. pic.twitter.com/wK1wMiQbeK
— Rohini Singh (@rohini_sgh) March 22, 2025