கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்களை மறந்துவிட கூடாது.! உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு.!

Supreme Court Chief Justice Chandrachud says about Indian army

இன்று உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு மதங்கள் கடந்தும் பலரும் தங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், இன்று அனைவரும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த கொண்டாட்டத்திற்கு நடுவில், நமது இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிட கூடாது.

தொடரும் பதற்றம்.. பூஞ்சில் நிறுத்தப்பட்ட கூடுதல் இராணுவ படைகள்…!

சில நாட்களுக்கு முன்பு நமது ஆயுதப்படையைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக உயிரை விட்டனர். எனவே கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது, எல்லையில் நின்று நம்மை பாதுகாத்தவர்களை மறந்துவிடக் கூடாது. நம்மையும் நம் தேசத்தையும் காக்கும் ராணுவ வீரர்களுக்காகவும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவோம் எனவும் சந்திரசூட் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியைச் சேர்ந்த நாயக் பிரேந்தர் சிங், உத்தரகண்ட் மாநிலம் பவுரி கர்வாலைச் சேர்ந்த ரைபிள்மேன் கவுதம் குமார், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த நாயக் கரண் குமார் மற்றும் பீகார் மாநிலம் நவாடாவை சேர்ந்தவர் சந்தன் குமார் ஆகியோர் என நேற்று (ஞாயிற்று கிழமை) அடையாளம் காணப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்