இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அதில்,
அவர் கூறுகையில்,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.சென்னையில் ஏப்ரல் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா பங்கேற்கிறார்.தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 37 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…