தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்றுதான் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதினார்.அதில்,பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
இது தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகளிடையே பிளவு ஏற்பட்டது போல பிம்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.அதில், தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்றுதான்.ஒரு விவகாரம் குறித்து ஒவ்வொருவர் பார்வையில் வேறுவிதமான கருத்துக்கள் கடந்த காலங்களில் உருவாகி இருக்கின்றன.
3 பேர் கொண்ட குழுவில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது இயலாத ஒன்று.எந்த புகார் குறித்த பொது விவாதத்திற்கு நான் எப்போதும் தயார். தற்போது தேர்தல் காலம் என்பதால் விவாதத்திற்கு நேரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…