மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது..! 100% பாதுகாப்பானது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
EVM: மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் 100% பாதுகாப்பானது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூன் 1-ம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More – Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.!
இந்த தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசியுள்ளார். அவர் கூறும்போது, “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 100% பாதுகாப்பானது, மின்னணு வாக்கு பதிவு எந்திரம் என்பது பயன்படுத்தப்படுவதால் தான் ஏராளமான கட்சிகள் பயமில்லாமல் தேர்தல்களில் பங்கெடுக்கின்றன.
Read More – மக்களவை தேர்தல்… முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான பல்வேறு புகார்களை 40 முறை நீதிமன்றம் பரிசீலனை செய்து அத்தனையையும் நிராகரித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நியாயமான மற்றும் சிறந்த முறையிலான ஓட்டுப்பதிவு நடக்கும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அறியும். ஏனென்றால் அதே ஆளும் கட்சி கூட தேர்தலில் தோற்றுப்போய் உள்ளது, இதில் முறைகேடு செய்யவே முடியாது” என்றார்.