தள்ளு வண்டியில் இருந்து முட்டை திருடிய தலைமை காவலர் சஸ்பெண்ட் – வைரல் வீடியோ உள்ளே!

Default Image

சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த முட்டை திருடிய பஞ்சாபை சேர்ந்த தலைமை காவலர் தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மக்களின் உயிர்காக்கும் காவல் துறை அதிகாரிகள் பல இடங்களில் பாராட்டுக்குரியவர்களாக இருந்தாலும் சில இடங்களில் மக்களுக்குப் பிடிக்காத சில விஷயங்களிலும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்றாக கடை வைத்திருப்பவர்களிடம் தகராறு செய்து பொருட்களை இலவசமாக பெற நினைப்பது உள்ளிட்ட சில தவறான செயல்களில் சில காவலர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் பஞ்சாபிலுள்ள சண்டிகர் ஃபதேகர் சாஹிப் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த இடத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த முட்டை தள்ளு வண்டியில் இருந்து முட்டைகளை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் இது குறித்து நடத்திய விசாரணையில், ஃபதேகர் சாஹிப் பகுதியில் தலைமை காவலராக பணிபுரிந்து வரக்கூடிய பிரீத் சிங் என்பவர் தான் இந்த முட்டையை திருட்டில் ஈடுபட்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமை காவலராக பணிபுரிந்து வந்த பிரித் சிங் அவர்கள் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த முட்டை திருடிய வீடியோ இதோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்