ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பின் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு வெள்ளிக்கிழமை (இன்று )விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சிதம்பரம் அவர் வீட்டிற்கு வந்த பின்னர் சிபிஐ அவரை கைது செய்தனர்.பின் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .விசாரணைக்கு பின்னர் அவருக்கு 26-ம் தேதிவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் போபண்ணா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது .
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…