சிதம்பரம் முன் ஜாமீன் கோரிய மனு !உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

Default Image

ஐஎன்எக்ஸ்  நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பின் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு வெள்ளிக்கிழமை  (இன்று )விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மொத்தமாக சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.ஓன்று அமலாக்கத்துறை  வழக்கில் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதேபோல் சிபிஐ கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தும்  முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி  மற்றும் போபண்ணா அமர்வில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  26-ம் தேதிவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong