ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் .இதனால் இன்று சிதம்பரம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…