இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் மனு

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில்  இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு இடையில் கடந்த  ஆகஸ்ட் 21 ஆம் தேதி  சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு  5 நாட்கள் சிபிஐ  காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை  நடைபெற்றது.சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் .இதனால் இன்று சிதம்பரம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Manipur riot - Live
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat