106 நாட்கள் சிறையில் இருந்த சிதம்பரம் – மகிழ்ச்சி தெரிவித்த ராகுல் காந்தி
- ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
- ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிதம்பரத்தை முதலில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.இதே வழக்கில் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைத்தது.
இதனால் சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்து.சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Mr P Chidambaram’s 106 day incarceration was vengeful & vindictive. I’m glad that the SC has granted him bail. I’m confident that he will be able to prove his innocence in a fair trial.
— Rahul Gandhi (@RahulGandhi) December 4, 2019
இந்தநிலையில் சிதம்பரம் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று ட்வீட் செய்துள்ளார்.