அமலாக்கத்துறை காவலில் உள்ள சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த 17-ஆம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர் 24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அக்டோபர் 24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.இதனையடுத்தது சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தது தொடர்பாக சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…