சிதம்பரத்துக்கு வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன்-உச்சநீதிமன்றம் உத்தரவு

சிதம்பரத்திற்கு வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.ஓன்று அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதேபோல் சிபிஐ கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதில் அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே சிபிஐ எதிராக சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025