சிதம்பரத்தின் மனுவை பட்டியலிட்ட பிறகே விசாரிக்க முடியும் ! உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
ரமணா மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார். பின் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது.ஆனால் நீதிபதி ரமணாவிடம் பதிவாளரிடம் மனுவில் பிழை உள்ளது என்று தெரிவித்தார்.பின்னர் பதிவாளர் மனுவின் பிழையை சரி செய்து நீதிபதியிடம் தெரிவித்தார். பின் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற வாய்ப்பு இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.
மனு பட்டியலிடப்பட்ட பிறகே விசாரணை நடைபெறும் என்றும் வழக்கு பட்டியலில் வராமல் விசாரிக்க முடியாது. வழக்கை இன்றே பட்டியலிடுவது தலைமை நீதிபதியின் கையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.