சிதம்பரத்தை தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் மத்திய நித்தியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.நேற்று இரவு முதலே சிபிஐ சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது .இதனையடுத்து விசாரணைக்கு பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சிதம்பரத்தை ஆஜர்படுத்தினார்கள்.
சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் மற்றும் அபிஷேக் சிங் மன்வி வாதிட்டார்கள்.சிபிஐ தரப்பில் துஷர் மேக்தா வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் கழித்து வழங்குவதாக அறிவித்தார்.இதன் பின்னர் சிதம்பரத்தை வருகின்ற 26-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ -க்கு அனுமதி அளித்தார்.
மேலும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் தினமும் 30 நிமிடம் அவரை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.