உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ-க்கு எதிரான வழக்கு தொடர்பான விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடையில் நேற்று முன்தினம் இரவு(ஆகஸ்ட் 21 ஆம் தேதி ) சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.டெல்லி ஜோக் பார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனையடுத்து நேற்று(ஆகஸ்ட் 22 ஆம் தேதி) டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் முன்னிலையில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில்,அபிஷேக் மனு சிங்வி மற்றும் விவேக் தங்கா ஆஜரானார்கள்.சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா(Solicitor General ) ஆஜராகினர்.சிபிஐ தரப்பில் அந்த நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.பின்னர் நீதிபதி அஜய் குமார் வருகின்ற 26 -ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் சிதம்பரத்தின் குடும்பத்தினரும்,வக்கீல்களும் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவரை மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை தங்களது அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.ஓன்று அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதேபோல் சிபிஐ கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று (ஆகஸ்ட் 23 ஆம் தேதி) நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினார்கள்.சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா(Solicitor General ) ஆஜராகினர்.சிபிஐ தரப்பில் இந்த விசாரணையை விசாரிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் சிபிஐ கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்கள்.
இதன் பின்னர் அமலாக்கத்துறை தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் முடிவை அறிவித்தார்கள்.இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்கள்.மேலும் வழக்கின் விசாரணைகளை வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்துவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சிதம்பரத்தின் சிபிஐ காவல் உறுதியாகியுள்ளது ,மேலும் அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…