ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு ! இன்று விசாரணை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன்மனு மீது விசாரணை நடைபெற்றது.இதில் சிபிஐ தரப்பில் சிதம்பரம் தரப்பு தகவல்கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.சிதம்பரம் தரப்பில் ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் முதலீடுதான் வந்துள்ளது; எந்த பணமும் கையாடல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தது.