அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேட்டு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு காரணமாக முன்ஜாமீன் கேட்டு,டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்று முதல் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு வந்து செல்கின்றனர்கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் 4 முறை வந்து உள்ளனர்.
இந்த நிலையில் சிதம்பரம் குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர் சிதம்பரம். உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்.பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் சிதம்பரம்.சிதம்பரத்துடன் இணைந்து நாங்கள் நிற்போம். எந்த பின்விளைவுகள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உண்மைகாக போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…