அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்-பிரியங்கா காந்தி

Default Image

அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் நிறுவனம்  முறைகேட்டு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு  காரணமாக முன்ஜாமீன் கேட்டு,டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்று முதல் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு வந்து செல்கின்றனர்கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் 4 முறை வந்து உள்ளனர்.

இந்த நிலையில் சிதம்பரம் குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர்  சிதம்பரம். உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்.பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் சிதம்பரம்.சிதம்பரத்துடன் இணைந்து நாங்கள் நிற்போம். எந்த பின்விளைவுகள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உண்மைகாக போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்