Veg Biryani From Swiggy [File Image]
ஹைதராபாத் : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மூலம், ஆர்டர் செய்த பிரியாணியால் குறைபாடு இருப்பதாக சமூக வளைதளமான X தள பக்கத்தில், இரண்டு தனித்தனி வாடிக்கையாளர் தங்களது புகாரை அளித்துள்ளனர்.
அதாவத, ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகமான மெஹ்ஃபிலில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட பன்னீர் பிரியாணியில் சிக்கன் எலும்பு இருப்பதை அவினாஷ் என்ற பயனர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, இதே மாதிரியான வேறொரு புகாரை சாய் தேஜா என்பவர் அளித்திருந்தார். அதே உணவாகமான மெஹ்ஃபில் கடையிலிருந்து ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினார். பின்னர், அந்த சிக்கன் பிரியாணியில் இருக்கும் ஒரு கறி துண்டில் புழு கிடப்பதை சாய் தேஜா புகைப்படங்கள் பகிருந்தார்.
இதனையடுத்து, ஸ்விகியில் ஆர்டர் செய்த அந்த சிக்கன் பிரியாணிக்காக தான் ரூ.318 அவர் கொடுத்ததாகவும், இதனை குறித்து ஸ்விகியிடம் தெரிவித்த போதிலும் அவருக்கு ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அன்று நடந்துள்ளது.
இது போன்ற பிரபலமான கடையில் இருந்து ஆர்டர் செய்த உணவில் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை கண்டு மக்கள் சற்று அதிரிச்சியில் இருந்து வருகின்றனர்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…