சத்தீஸ்கர் : பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரி குறைப்பு ….!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோலுக்கு 1%, டீசலுக்கு 2% வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்தது. மேலும், மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களிலும் வாட் வரி குறைத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது சத்தீஸ்கர் மாநிலத்தில் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதமும், பெட்ரோல் மீதான வாட் வரி 1 சதவீதமும் குறைப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் அரசுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#CabinetUpdates
मुख्यमंत्री श्री @bhupeshbaghel द्वारा #छत्तीसगढ़ की जनता को बड़ी राहत देते हुए कैबिनेट में लिए गए महत्वपूर्ण निर्णय
????पेट्रोल-डीज़ल के दाम में की गयी बड़ी कटौती
????डीज़ल में VAT पर 2% की कमी (1/2)#FuelPriceGoesDown @DPRChhattisgarh @PIBHindi @AHindinews @ANI— CMO Chhattisgarh (@ChhattisgarhCMO) November 22, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025