சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்டங்கள், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன.
இந்த பகுதியில் மொத்தம் சுமார் 2,900 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இதில் 650 வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது. இதுபோன்று, மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பு..! சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!
இதன் நிலையில், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும், மிசோராமத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் 9 மணி நிலவரம் குறித்து பார்க்கலாம். அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மிசோரம் மாநிலத்தில் 12.80% வாக்குகள் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் 9.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், நாகாலாந்தின் தாபி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 29.03% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…