அமலாக்கத்துறை, வருமானவரித்துறைக்கு விரைவில் ஓய்வு.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பேட்டி.!

Chhattisgarh CM Bhupesh Baghel

இந்த மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மிசோராம் மாநிலத்தில் 40 தொகுதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதே போல 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இங்கு காங்கிரஸ் -பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இனி அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் சிறிது ஓய்வு எடுப்பார்கள்.

நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.! பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!

வரும் நவம்பர் 17க்கு பிறகு ஓய்வு எடுத்து, அவர்கள் குடும்பத்தை கவனிப்பார்கள். மீண்டும் மக்களவை தேர்தலுக்கு முன்னர் வருவார்கள். என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்தார்.

அதாவது, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக அண்மை காலமாக அடிக்கடி சோதனை (Raid) செய்து வருகின்றனர். சதீஸ்கர் மாநில முதல்வர் மீது கூட ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாய் வரையில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்