சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதல்வர்…! நடந்தது என்ன..? வீடியோ உள்ளே…!
கோவர்தன் பூஜையில் கலந்து கொண்ட முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அவரது கைகளில் 8 முறை சவுக்கடி கொடுக்கப்பட்டது.
வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்தநாள்,கோவர்தன் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், துர்க் நகரில்,சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கோவர்தன் பூஜையில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அவரது கைகளில் 8 முறை சவுக்கடி கொடுக்கப்பட்டது. பின் தன்னை சவுக்கால் அடித்த நபரை கட்டியணைத்தார். முதல்வர் பூபேஷ் பாகல் சவுக்கடி வாங்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘மாநிலத்தின் நன்மைக்காக கசை அடி வாங்கினேன். எல்லா தடைகளும் விலகும் என நம்புகிறேன்.’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
प्रदेश की मंगल कामना और शुभ हेतु आज जंजगिरी में सोटा प्रहार सहने की परंपरा निभाई।
सभी विघ्नों का नाश हो। pic.twitter.com/bHQNFIFzGv
— Bhupesh Baghel (@bhupeshbaghel) November 5, 2021