முதல் முறை…செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில்,இவ்விழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி,இன்று (ஜூன் 19) மாலை 5 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி மைதானத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களை செஸ் ஒலிம்பியாட் ஜோதி சுற்றி வரும்.அதன்பின்னர்,ஜூலை 28 ஆம் தேதி தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கையில் ஜோதி ஒப்படைக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கவுள்ளது.
முதல்முறையாக தொடங்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இனி வரும் ஒலிம்பியாட் தொடர்களில் இடம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.