சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவுமாறு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வேண்டுகோள்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதனையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்- தயவுசெய்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…