பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது!
சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் வீடு அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், பென்ட்ரைவ் போன்று முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
அதன் அடிப்படையில் நாகை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 2 பேர் அன்ஸாருல்லா என்று பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் அமைப்பதற்கு உதவி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இம்மாதம் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணை மூலம், டெல்லியில் அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கூறி 14 பேரை கைது செய்தனர். அவர்களை கைது செய்து விமானம் மூலம் சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.