பிரபல UPI பரிவர்த்தனை செயலுக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ஒரே மாதிரியான லோகோ இருப்பதாக கூறி போன் பே தொடர்ந்த வழக்கில், மொபைல் பே நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் பிரபல மொபைல் செயலியான போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அதில், தனது நிறுவன லோகோவை மொபைல்பே எனும் பரிவர்த்தனை செயலி காப்பி அடித்துவிட்டதாக கூறி அந்த மொபைல் பே செயலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு செயலிகள் லோகோவும் ஒரே மாதிரி இல்லை என்றாலும், சாதரண மக்கள் பார்க்கையில் அவை ஒரே மாதிரி போல இருக்கும் சூழல் நிலவுகிறது. என கூறி,
அந்த மொபைல் பே பரிவர்த்தனை நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், பரிவர்த்தனை செய்ய மட்டுமே தடை, பயனர்கள் அதில் தங்கள் அக்கவுண்டில் பணத்தை சேமித்து வைத்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மொபைல் பே செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தடை விதிக்க வேண்டும் என போன்பே கூறியிருந்தது. இதுகுறித்து பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.