சென்னை-பெங்களூர் கிரிக்கெட் போட்டி..! சூதாட்டம் செய்த 4 பேர் கைது..!
தெலுங்கானாவில் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுபோல, இந்த போட்டிகளை வைத்து சூதாட்டம் செய்வதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில், சென்னை-பெங்களூர் கிரிக்கெட் போட்டியை வைத்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மொய்னாபாத் பண்ணை வீட்டில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த சரியான தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தப்பிச்சென்றுள்ள நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் ரொக்கம் மற்றும் பல கணினிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், தப்பி ஓடியவர்களை தேடும் பணியும் நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.