மாநிலங்களவையில் சேம் ! சேம் ! என எதிர்க்கட்சி முழக்கம் !
காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் ஆஜராக வேண்டும் என கொறடா உத்தரவு விட்டு இருந்தார்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிவித்தார்.அந்த அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என அறிவித்தார்.
மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது.ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் எனவும் , லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பிற்கு சேம் ! சேம் ! என முழக்கத்தை எழுப்பினார்கள்.