அரசியலில் குற்றவாளிகள்……..அதிரடி வழி….கையாண்ட தேர்தல் ஆணையம்….இனி ஆப்பு குற்றவாளி அரசியவாதிக்கு இணைய கிடுக்குபிடி……!!!!
அரசியலில் குற்ற பின்னனி உள்ளவர்கள் பதவியடைவதைத் தடுக்கும் உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
அதன் முன்னோடியாக மிசோரம் மாநில தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கவும், வங்கிக் கணக்குகளில் சந்தேககத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை ஆராயவும் தேர்தல் ஆணையம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசியலில் புகலிடம் தேடும் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில், கிரிமினல் வழக்குகள் குறித்து வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதனை கடுமையாகப் பின்பற்றுவோம் என்று என்று ராவத் தெரிவித்தார்.
குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறினார்.இதனால் குற்றப்பின்னனி உடைய அரசியல்வாதிகள் இணையத்தால் முடக்கப்படுகிறார்கள்
DINASUVADU