டெல்லி விமான நிலையத்தில் சோதனை..! 3.7 கோடி பறிமுதல்..!
டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையில் 3 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு முனையத்தில் வழக்கமான சோதனைகள் நடைபெற்றது. அந்த சோதனையில் மூன்று கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
டெல்லி போலீசார் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும், மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.