கர்நாடகாவில் வயதானா பெண்ணிடம் அத்துமீறிய இருவருக்கு செருப்படி …
உறங்கியபோது அத்துமீறிய 2 பேரை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பேருந்து நிலையத்தில் வயதான பெண் ஒருவர் காலணியால் தாக்கினார். ஹூப்ளியில் தனது கிராமத்துக்குச் செல்லும் கடைசிப் பேருந்தை தவறவிட்ட 55 வயது பெண் ஒருவர், பேருந்து நிலையத்திலேயே உறங்கியுள்ளார்.
அப்போது, அருகில் படுத்திருந்த 2 பேர், அவரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், இருவரையும் தனது காலணியால் தாக்கினார். செல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.