சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் திரு. அஜித் ஜோகி அவர்கள் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் . இவருக்கு வயது 74 . இவர், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தவர். இவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்படவே ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீநாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு சுவாச பிரச்சனை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அதன் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…