இளைஞனை விரட்டி விரட்டி கொத்தும் காக்கைகள்! இதன் உண்மை பின்னணி என்ன?
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மண்டலத்தில் இருக்கும் சுமேலா என்ற கிராமத்தில் வசிப்பவர் சிவா கேவத். இவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே அவரை காக்கைகள் விரட்டி விரட்டி கொத்துகின்றனர். அவர் எப்போது வெளியே வருவார் என அவர் வீட்டு வாசலில் காக்கைகள் மற்றும் அந்த கிராம வாசிகளும் கூட காத்திருக்கின்றனர்.
ஏனென்றால், சிவாவை காக்கைகள் விரட்டி விரட்டி கொத்துவது, அந்த கிராம வாசிகளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட சிவாவை வெளியே வர சொல்லி, காக்கைகளை அவரை கொத்துவதை ஒரு பொழுதுபோக்காக பார்த்து செல்லுகின்றனர்.
காக்கைகள் எதற்காக சிவாவை கொத்துவதின் உண்மை பின்னணி என்னவென்றால், மூன்று வருடங்களுக்கு முன்பதாக, ஒரு வலையில் சிக்கிய காக்கை குஞ்சுயை காப்பாற்றும் முயற்சியில் சிவா ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் அந்த வலையை விட்டு காக்கை குஞ்சியை எடுத்த போது, அந்த காக்கை குஞ்சி எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது.
அன்று முதல் காக்கைகள் சிவா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில், இந்த நிகழ்வு எதர்ச்சையாக நடப்பதாக எண்ணிய சிவா, நாட்கள் கடந்து போன பின்பு தான், இந்த காக்கைகளை தன்னை மட்டும் தாக்குவதை புரிந்து கொண்டார்.
தினக்கூலி தொழிலாளியான சிவா, இந்த காக்கைகளுக்கு பயந்து வெளியில் வேலைக்கு செல்லாமல் இருக்க இயலாது. எனவே, இப்போதெல்லாம் அவர் வெளியில் செல்லும் போது கையில் ஒரு குச்சியோடு தான் செல்லுகிறாராம்.