ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமன் யாதவ். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 7 வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். ஆரம்பத்தில் அன்பாக இருந்த மனைவி சுமன் கடந்த ஒரு வருடமாகவே சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு தனது கணவர் அஜித்தை அடிக்க ஆரம்பித்தார்.
கையில் கிடைக்கும் கிரிக்கெட் பேட், பூரிக்கட்டை போன்றவற்றை வைத்து அஜித்தை அடித்துவிடுவாராம். இந்த நிலையில் வீடு முழுவதும் தனது கணவனை துரத்தி துரத்தி வெளுத்து வாங்கும் வீடியோ கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை அஜித் நீதிமன்றத்தில் காட்டி தன்னை காப்பாற்றும் பட, நீதிபதியிடம் காட்டி கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் காட்டிய அந்த வீடியோ காட்சியை பார்த்து அதிர்ந்துபோன நீதிபதி அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும் படியும், காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…