ஆசியாவை கலக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ்! 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு.!
‘பிகினி கில்லர்’ என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்திலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
வியட்நாமிய மற்றும் இந்தியப் பெற்றோரைக் கொண்ட பிரெஞ்சு நாட்டைக் குடியுரிமையாகக் கொண்ட இந்த சார்லஸ் சோப்ராஜ், 1970 களில் ஆசியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளதாக அறியப்படுகிறார். பிரான்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மற்றும் இஸ்ரேல் நாட்டவரைக் கொன்றதற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
அதன்பிறகு அவர் ஹாங்காங்கில் இருந்து போலி பாஸ்போர்ட் உதவியுடன் நேபாளத்திற்குச் சென்றுள்ளார். இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகளை கொலை செய்த குற்றச்சாட்டில், மீண்டும் நேபாள சிறையில் அடைக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்துவருகிறார்.
ஆனால் தண்டனை காலத்தை விட அதிகமாக காலம் தான் சிறையில் இருந்துவிட்டதாக சோப்ராஜ், தன் வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் வயது முதிர்வு காரணமாக தண்டனை காலத்தை தனது வாழ்நாளில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் சபனா பிரதான் மல்லா மற்றும் தில் பிரசாத் ஸ்ரேஸ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, சோப்ராஜுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை தேவை மற்றும் சோப்ராஜின் உடல் நிலை மற்றும் வயது காரணமாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.