சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

rahul gandhi - sonia gandhi

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் சுமன் துபே மற்றும் பிறரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா ஆகியோர் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

நேஷனல் ஹெரால்டு என்பது 1938-இல் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட ஒரு செய்தித்தாள் ஆகும். இது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. இந்த செய்தித்தாளை நிர்வகித்து வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் இருந்தது.

2010-இல், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கிய நிலையில், அதன் கடன்களைத் தீர்க்கவும், மறுசீரமைப்பு செய்யவும் ஒரு புதிய நிறுவனமான யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் உருவாக்கப்பட்டது. யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முக்கிய பங்குதாரர்களாக இருந்தனர். அவர்கள் 38% பங்குகளை வைத்திருந்தனர்.

இந்த நிறுவனம் AJL-இன் பெரும்பாலான பங்குகளை வாங்கியது, இதன் மூலம் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் மற்றும் அதன் சொத்துகளின் கட்டுப்பாடு யங் இந்தியன் நிறுவனத்தின் கீழ் வந்தது. கடந்த 2012-இல், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் சிலர் மீது, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக புகார் அளித்தார்.

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த தனிப்பட்ட புகாரின் அடிப்படையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் ஜூன் 2014 உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது. ஏஜேஎல் நிறுவனத்தை யங் இந்தியன் கையகப்படுத்தியதில் சாத்தியமான நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்