7 ஆண்டுகள் கழித்து முக்கிய புகாரில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஏழு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2012 ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் அவர்களுக்கு சொந்தமான கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கிடைக்கப்பெற்றன.
அந்த சமயத்தில் வீட்டில் யானை தந்தங்களை பொதுமக்கள் வைத்திருக்கக்கூடாது. அதனை மீறி நடிகர் மோகன்லால் 4 தந்தங்களை வீட்டில் வைத்திருந்தார். பிறகு, அவர் அப்போது கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டு பின்னர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து யானைத் தந்தங்களை திரும்ப வாங்கினார்.
இந்த சம்பவத்தை எதிர்த்து ஏழூரை சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தற்போது ஏழு ஆண்டுகள் கழித்தும் இந்த வழக்கின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து கேரள கொடநாடு போலீஸார் மோகன்லால் உட்பட மேலும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.