மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பெயரை மாற்ற ஒப்புதல்..?
புதிய கல்விக் கொள்கை வெளியிட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை கடந்த 2017-ஆம் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர்.
இதன்மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது . இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து விவாதிக்கபட்டது. அப்போது, புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்ற ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து இன்று மாலை 4 மணிக்கு விரிவான அறிக்கை வெளியாக உள்ளது.