நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரையும் மாற்றுங்கள் – பிரதமரை சீண்டிய குஜராத் முன்னாள் முதல்வர்..!
நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மறுபெயரிட வேண்டும் என குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது. இதற்கிடையில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி தோல்வியடைந்தது. இதனால், இந்தியாவின் பெண்கள் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணிகள் நாடு முழுவதும் பாராட்டப்படுகின்றன.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை கேல் ரத்னா விருதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக, சிறந்த ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் நாட்டின் விளையாட்டுத்துறையில் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது. இனிமேல் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் விருது வழங்கப்படும் என இன்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பிரதமர் மோடி, மேஜர் தயான் சந்த் இந்தியாவுக்கு பல கவுரவங்களை அளித்துள்ளார். அவர் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். பல முறை அவர் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று நாட்டில் பலர் கோரியிருந்தனர். பொது உணர்வை அங்கீகரித்து, கேல் ரத்னா விருது இப்போது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என மறுபெயரிடப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்! என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தனது டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர்தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மறுபெயரிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
As @narendramodi Govt renamed Rajiv Gandhi Khel Ratna Award to Major Dhyan Chand Khel Ratna Award, I would like to request them to rename Narendra Modi Stadium to Sardar Patel Stadium again. pic.twitter.com/w1ccKacK4b
— Shankersinh Vaghela (@ShankersinhBapu) August 6, 2021