ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றனர்.
நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து நேற்று அதிகாரிகள் நேரடியாக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில்,கேரளா ஹைகோர்ட் வியாழக்கிழமை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மறைமுக வரியை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மற்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த விஷயம் ஜிஎஸ்டி கவுன்சிலில் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், கவுன்சில் உறுப்பினர்கள் ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலிய பொருட்கள் சேர்க்கப்படுவதை விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினர்.எனவே,கேரள உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க நாங்கள் முடிவு செய்தோம். மேலும்,பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான நேரம் இது அல்ல என்று கவுன்சில் கருதுகிறது.மேலும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் 15.5% இருந்த வருவாய் நடுநிலை நிலை சீராக சுமார் 11.6% ஆக குறைந்துவிட்டது
கொரோனா நிவாரண பொருட்களில் சலுகை:
கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான தற்போதைய ஜிஎஸ்டி வரிச்சலுகை விகிதங்களை 31 டிசம்பர், 2021 வரை நீட்டிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த மருந்துகளில் பின்வருபவை: ஆம்போடெரிசின் பி (வரி விலக்கு), ரெம்டெசிவிர் (5%), டோசிலிசுமாப் (வரிவிலக்கு), ஹெப்பரின் போன்ற கோகோலண்ட்ஸ் ( 5%).
ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைத்தல்:
ஜிஎஸ்டி விகித மாற்றங்கள் குறித்த பொருட்கள் தொடர்பான முக்கிய பரிந்துரைகள்:
ஜிஎஸ்டி விலக்கு:
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…