நிலவை நோக்கி விரையும் சந்திரயான் 2..! 5-வது முறையாக மாற்றியமைப்பு-இஸ்ரோ இன்பச் செய்தி

Default Image

சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 27ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.இதை தொடர்ந்து  ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நிலவை  சுற்றி வருகிறது.

இந்நிலையில் சந்திரயான்2 விண்கலம் ஆனது நிலவை மேலும் நெருங்கின்ற வகையில் 5வது முறையாக சந்திராயன்2 சுற்றுப்பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது மாற்றி அமைத்தனர்.

Image

இந்நிலையில் சந்திரயான் 2  நிலவுச் சுற்றுப்பாதையின் தற்போதைய உயரமானது  குறைந்தபட்சம் 119.கி.மீ.ஆக உள்ளது அதிகபட்சம் உயரமாக 127 கி.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று  இஸ்ரோ இன்பச் செய்தியை தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்