நிலவின் தென் துருவபகுதியை ஆராய சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டது.
சந்திராயன் 2 ஆரம்பம் :
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது. ஆனால் அன்று ஏவப்பட இருந்த சந்திராயன் 2 தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்ட்டிருந்தது
விண்ணில் பாய்ந்தது :
புவி மற்றும் நிலவின் சுற்று வட்டப்பாதையில் :
இதன்பின் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.
கடந்த ஆகஸ்டு 14-ஆம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
சந்திராயன் 2 விண்கலம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
விக்ரம் லேண்டர் :
செப்டம்பர் 2-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.
செப்டம்பர் 3-ஆம் தேதி 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.
திக் திக் 15 நிமிடங்கள் :
அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ஞைகளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.
அதன் பின்பு அந்த திக் திக் 15 நிமிடங்கள் தொடங்கியது உலகமே உற்று நோக்கிக்கொண்டு இருந்தது அனைவரிடத்திலும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
லேண்டரின் தொடர்பு துண்டிப்பு :
அதன் பின்பு யாரும் எதிர்பாராத வகையில் சமிக்ஞை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆலோசிக்க தொடங்கினர் .இந்நிலையில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கடைசியாக உள்ள டேட்டாவை வைத்து அது ஏன் என ஆராயப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
மோடி பாராட்டு :
‘நம்பிக்கையை இழக்க வேண்டாம். தைரியமாக இருங்கள்.’ என விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறிவிட்டு சென்றுவிட்டார். “நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். “வாழ்க்கையில் அதன் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. நீங்கள் அடைந்திருப்பது ஒரு சிறிய சாதனையல்ல” என்று பிரதமர் மோடி கூறினார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…